Thursday, May 10, 2018

பாலகாண்டம் சர்க்கம் 1 ஸ்லோகம் 3&4

3வது ஸ்லோகம்:

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வபூதேஷு கோ ஹித: |
வித்வான் க: க: சமர்தஸ்ச கஸ்ஷ்ருகப்ரியதர்ஷன: ||

பொருள்:

சிறந்த குலவழக்கங்கள் உள்ளவர் யார்? அனைத்து வித விலங்குகளிடமும் யார் மிகவும் அன்பு காட்டுகிறார்? ஆத்ம மற்றும் அனாத்ம தத்வத்தை முழுமையாக அறிந்தவர் யார்? ஐஹிகத்திலும் ஆயுஷ்யகத்திலும் அனைத்து விதங்களிலும் மகிழ்ச்சியை உண்டாக்குபவர் யார்?

விளக்கம்:

சாரித்ரேண - சிறந்த வழக்கமுள்ள
யுக்த: - பின்பற்றுபவர்
க: - யார்?
சர்வபூதேஷு - அனைத்து வித விலங்குகளின் நடுவில்
க: - எந்த ஆண்?
ஹித: - அனைத்து விதங்களிலும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்
க: - யார்?
வித்வான் - ஆத்ம மற்றும் அனாத்மகத்தை முழுவதுமாக அறிந்தவர்
சமர்தஸ்ச - யாராலும் செய்யமுடியாத செயல்களை செய்துமுடிப்பதில் வல்லவர்
க: - யார்?
ஏகப்ரியதர்சன: - எப்போது பார்த்தாலும் அன்பினைப் பொழிபவர்
க: - யார்?

சிறப்புக் கருத்து:

ஆத்ம-தத்வம் மற்றும் அனாத்ம-தத்வம் இரண்டையும் முழுமையாக அறிந்தவர் வித்வான் என்று அழைக்கப்படுகிறார். க: ஹித: = ‘க: சமர்தஸ்ச’ - யாராலும் செய்து முடிக்கமுடியாத விஷயத்தை செய்பவர் ’சமர்த்த’ என்று அழைக்கப்படுகிறார். ‘அகடனபடு’ என்றும் அழைக்கலாம். 

‘கஸ்சைகப்ரியதர்சன:’ = உலகத்தில் இவரைப் போல மற்றவர்களுக்கு அன்பு காட்டுபவர் வேறு யாருமில்லை. ஒரு மனிதரைப் பார்த்தால், ஒரு முறை அன்பானவராகத் தெரிவார். மற்றொரு முறை அன்பு இல்லாதவராகத் தெரிவார். அத்தகையவரை ஒரு முறை பார்த்தால், மகிழ்ச்சி வருகிறது. வேறொரு முறை பார்த்தால் துக்கம் வருகிறது. ஆனால், இவன் அப்படியில்லை. ‘க்‌ஷணே க்‌ஷணே யன்னவதாமுப்யைதி ததேவ ரூபம் ரமணீயதாயா:’ ஒவ்வொரு கணமும் புதிதுபுதிதாக ரூபம் காணப்பட்டால் அதை ரமணீய என்று அழைக்கின்றனர். இத்தகைய அழகானவர் யார்? - என்று கேட்கிறார்.

4வது ஸ்லோகம்:

ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ த்யுதிமான் கோSநசூயக: |
கஸ்ய பிப்யதி தேவாஸ்ச ஜாதரோஷஸ்ய சம்யுகே ||

பொருள்:

அனைத்து இந்திரியங்களையும் தனது வசத்தில் வைத்திருப்பவர் யார்? கோபத்தையும் தன் வசத்தில் வைத்திருப்பவர் யார்? அனைத்து உலகமும் பார்த்து வியக்கும்படியான தேக-காந்தியை வைத்திருப்பவர் யார்? மற்றவர்களிடத்தில் இருக்கும் நற்குணங்களைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? கெட்ட விஷயங்களுக்காக யாருக்குக் கோபம் வந்தால், அசுரர்கள் மட்டுமல்ல தேவர்களும் பயப்படுவர்?

சிறப்புக் கருத்து:

ஆத்மா என்னும் சொல்லிற்கு உடல் மற்றும் இந்திரியங்கள் என்று பொருள். இவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பவர் யார்? ’ஆத்மா ஜீவே த்ருதௌ ஸ்வபாவே பரமாத்மனி’ என்று சொல்வதைப்போல ஆத்மவான் என்றால் தைரியம் மிக்கவன் என்று பொருள். அந்த தைரியத்தைப் பெற்றவன் யார் என்பது அபிப்பிராயம். 

’ஜிதக்ரோத:’ - கோபத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பவரை ஜிதக்ரோத என்றும் அழைக்கலாம். தவறு செய்தவர்களின் விஷயங்களிலும், விரோதத்தைக் காட்டாமல், செய்த தவறுக்கு மட்டும் தண்டனை கொடுப்பவர் ஜிதக்ரோதன் எனப்படுகிறார். 

’த்யுதிமான் க:’ - உடலினால் மற்றும் மனதினால், சுத்தமான ஒளியை உடையவன் யாரோ, உலகம் முழுக்க இருப்பவர்கள் யாருடைய உடலின் ஒளியைப் பார்த்து வியப்படைகிறார்களோ, அவர் த்யுதிமான் எனப்படுகிறார்.

’க: அனசூயக:’ - நற்குணங்களைக் கொண்டவரிடத்தில் விரோதம் பாராட்டினால், அதை பொறாமை என்கிறார்கள். மற்றவர்களிடத்தில் இருக்கும் கல்வி, செல்வம், தவம் முதலானவைகளுக்கு அவரின் குணங்களை அலசி ஆராய்ந்து அதில் குறை கண்டுபிடித்து, அவரை திட்டுவதே பொறாமை என அழைக்கப்படுகிறது. இத்தகைய தோஷங்கள் சிறிதுகூட இல்லாதவர் யார் என்று கேட்பதே இந்தக் கேள்வியின் சாரம். 

’கஸ்ய பிப்யதி தேவாஸ்ச ஜாததோஷஸ்ய சம்யுகே’ - கஸ்ய = யாரைப் பார்த்தால் ; ஜாததோஷஸ்ய = கெட்ட விஷயங்களில் கோபப்படும்போது ; தேவாஸ்ச = தேவர்கள் மற்றும் அசுரர்கள் ; பிப்யதி = பயப்படுவார்கள்?

’பேத்ரார்த்தானாம் பயஹேதூனாம்’ என்னும் இலக்கண விதிப்படி, ‘கிம்’ என்னும் சொல்லின்மேல் ஐந்தாம் வேற்றுமை உருபு வரும்போது அது ‘கஸ்ய’ என்றாகிறது. ஆகையால் இங்கு மட்டும் க: என்றும் கஸ்ய என்றும் பயன்படுத்தியிருக்கிறார். இந்த மூன்று ஸ்லோகங்களில் மிகவும் ஆழமான விஷயத்தை விளக்கியிருப்பதால், அதற்கு ’உதாத்தா அலங்காரத்தை’ கவி பயன்படுத்தியிருக்கிறார். 

No comments:

Post a Comment

ಬಾಲ ಕಾಂಡ ಸರ್ಗ 1 ಸ್ಲೋಕ 5&6

ನನ್ನ ಈ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರಿಸಲು ತಾವೊಬ್ಬರೇ ಸಮರ್ಥರು ಏತದಿಚ್ಛಾಮ್ಯಹಂ ಶ್ರೋತುಂ ಪರಂ ಕೌತೂಹಲಂ ಹಿ ಮೇ   | ಮಹರ್ಷೇ ತ್ವಂ ಸಮರ್ಥೋ ಽ ಸಿ ಜ್ಞಾತ...